Amazon Kindle - E-book reader



இந்த கட்டுரையில் பாதி நான் எழுதியது , பாதி முகநூலில் இருந்து எடுத்தது . எழுதியவர்களின் பெயர்களை கட்டுரைகளின் மேலே குறிப்பிட்டிருக்கிறேன் 

Written by Subash VN

Kindle App அல்லது Kindle Deviceல் ஆங்கில புத்தகம் படிப்பது மிக எளிதான செயல். அர்த்தம் தெரியாத வார்த்தையை அழுத்தி தொட்டால் போதும் அந்த வார்த்தைக்கான பொருள் வரும். அதனால் Kindle appல் ஆங்கில புத்தகங்கள் படிக்க ஆரம்பியுங்கள்.

Amazon Kindle ல் புத்தகம் வாங்குகையில் "Enhanced typesetting - Enabled" என பார்த்து வாங்குங்கள். .

இரண்டு விரல்களால் புத்தகத்தை பெரிதுபடுத்துகையில் புத்தகத்தின் எழுத்துரு font பெரிதாகி Screen க்கு Fit ஆகும்.
இன்னொன்று, enhanced typesetting enabledல் மட்டுமே அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தொட்டால் அர்த்தம் வரும்., Pdfல் வராது.
Amazon kindle editionல் சில புத்தகங்கள் Pdf formatல் விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கினால் Laptopல் மட்டுமே படிக்க சுலபமாக இருக்கும், Mobileலும் Kindle deviceலும் pdf புத்தகங்களை படிப்பது சிரமம்.



இலவச புத்தகங்கள்.
புத்தகங்களை விரும்புவோர் Amazon Kindle appஐ பதிவிறக்கம் செய்யவும். Laptopலும் பதிவிறக்கம் செய்யலாம்.


Amazon kindle e-books advantages:
Amazon Kindle ebooksல் புத்தகங்கள் வாங்கினால் கரையான் புத்தகத்தை விழுங்காது.
வீட்டின் இடத்தை அடைக்காது.
லட்சக்கணக்கான புத்தகங்களை எங்கும் மிக எளிதாக Mobileலிலோ Laptopலோ எடுத்துச் செல்லலாம்.
ஆங்கில புத்தகங்களை மிக எளிதாக படிக்கலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தொட்டால் அகராதி அர்த்தம் சொல்லும்.
பிடித்த வரிகளை Highlight செய்து கொள்ளலாம்.
அமேசான் கிண்டிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் நீங்கள் ஒரு புத்தகத்தின் பக்கத்தை இரண்டு விரல்களால் பெரிதுப்படுத்தும் போது அப்புத்தகத்தின் எழுத்துகள் பெரிதாகி அப்பக்கம் (that page) Screenக்கு fit ஆகும். இதை Reflowable எனச் சொல்வார்கள்.
ஒரு Pdf பக்கத்தை நீங்கள் இரண்டு விரல்களால் பெரிதுபடுத்தி பார்க்கும் போது அந்த Page Screenஐ விட்டு வெளியே செல்லும். படிக்க இயலாது அல்லது மிகவும் சிரமமாக இருக்கும்.
இச்சிக்கல் Kindle formatல் இருக்காது. Amazon kindleன் Latest format .kfx.
Mobi format, Epub format இதன் தாத்தா. பழைய Formatகள்.
புத்தகத்திற்காக பெரும் பணத்தை செலவு செய் யும் என்னைப் போன்றோர் சிலரே.
Amazon kindleல் இலவசமாகவும் புத்தகங்களைளை பதிவிறக்கம் செய்யலாம்.
Amazon Kindle ல் புத்தகம் வாங்குகையில் "Enhanced typesetting - Enabled" என பார்த்து வாங்குங்கள்.
இரண்டு விரல்களால் புத்தகத்தை பெரிதுபடுத்துகையில் புத்தகத்தின் எழுத்துரு font பெரிதாகி Screen க்கு Fit ஆகும்.
இன்னொன்று, enhanced typesetting enabledல் மட்டுமே அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தொட்டால் அர்த்தம் வரும்., Pdfல் வராது.
Amazon kindle editionல் சில புத்தகங்கள் Pdf formatல் விற்பனை செய்கிறார்கள். அவற்றை வாங்கினால் Laptopல் மட்டுமே படிக்க சுலபமாக இருக்கும், Mobileலும் Kindle deviceலும் pdf புத்தகங்களை படிப்பது சிரமம்.

ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

Epub formatல் உள்ள புத்தகங்கள் படிப்பது மிகவும் எளிது.
Pdf ஐ படிப்பது சிரமம்.
Kindle format - .azw
Telegramல் நிறைய Epub புத்தகங்கள் உள்ளன.
1. Google Play books எனும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.
2. Epub புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.
3. அந்த புத்தகத்தை திறந்தால் Google booksல் பதிவேற்றம் செய்யட்டுமா எனக் கேட்கும்.
4. சரி என்று சொடுக்குங்கள் (Click).
5. Google Book செயலியில் படியுங்கள்.
ஒரு பைசா செலவில்லை.

Enjoying kindle unlimited. Just 1799rs per year. எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம். உங்கள் mobile போதும். Download Kindle app.

Written by சிபி தி-ஸ்பார்ட்டன். (Facebook)

குறிப்பிட்ட அந்த புத்தகங்களையெல்லாம் நீக்குவதற்கு, நாம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.
இதற்கு Kindle Unlimited Subscription அவசியமில்லை. அமேசான் யூசர் அக்கௌண்ட் இருந்தாலே போதுமானது.
1) உங்களது கிண்டில் பக்கங்களை கூகுள் குரோம் அல்லது ஏதேனுமொரு ப்ரௌசரில் ஒபன் செய்துகொள்ளுங்கள்.
2) உங்களது யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து லாக்-இன் செய்துகொள்ளவும்.
3) குறிப்பிட்ட புத்தகப் பக்கங்களுக்குச் செல்லவும். அப்பக்கத்தின் Product Details மற்றும் Customer Reviews பகுதிக்கு அடுத்ததாக, #Report_an_Issue என்கிற பகுதி இருக்கும். அதில், Report லிங்க்-கை க்ளிக் செய்யுங்கள்.
4) 'Report inappropriate content' என்கிற சிறு விண்டோ ஓபன் ஆகும். அதில் Choose issue பகுதியில், Sexually explicit என்கிற ஆப்ஸனை தேர்வு செய்யுங்கள். Description (optional) பகுதியில் கீழ்க்கண்ட வாசகங்களை காபி பேஸ்ட் செய்து, Submit பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
Hi, this book contains obscene portrayal of women, depicting them as - Sexual Imagery in humiliating situations; practicing Casual and Social Sex, that are abhorrent, unconscionable and a slur on the womanhood of India. These depictions are harmful and threats to our Moral Values, Indian/Tamil Standards and may corrupt our Social Forms such as Family, Community and Nation. So, I request you to remove this material from Kindle asap.
5) "Thanks for letting us know" என்கிற நன்றி அறிவிப்பு செய்திவரும். Done பட்டனை க்ளிக் செய்து, விண்டோவை க்ளோஸ் செய்துகொள்ளுங்கள்.
காணொளியாக:
நமக்காக, நம் பிள்ளைகளுக்காக, இளம் தலைமுறையினருக்காக இதைச் செய்வோம், நண்பர்களே!


Written by Vinod S. (Facebook) #Kindle - Some common FAQs
இரண்டாண்டுகள் ஆகிவிட்டன அமேசான் Kindle Paperwhite வாங்கி... அந்த அரிய சாதனத்தைப்பயன்படுத்தி இதுவரை தோராயமாக ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து நூல்கள் வாசித்திருப்பேன். 2015லேயே பத்தாயிரத்திற்கு வாங்கியது. மொபைல் மார்க்கெட் போல இல்லாமல்...இப்போதும் கிண்டில் பேப்பர் வொய்ட்டின் விலை அப்படியேதான் இருக்கிறது. (ஆறுதல்தான்.)

நீண்ட பயணங்களில் மாற்றுத்துணி எடுத்துக்கொள்கிறேனோ இல்லையோ கட்டாயம் பயணப்பையில் கிண்டில் இருக்கும். 2015 சென்னை மழையின் போது அதை எமர்ஜென்ஸி லைட்டாகவும் கூட பயன்படுத்தி இருக்கிறேன். மொபைலை நோண்டிக்கொண்டே இருக்கிற வியாதியஸ்தர்களுக்கு கிண்டில் ஒரு நல்ல மாற்றுக்கருவி. சமகாலத்து Screen slaves generationஐ வாசிக்க வைக்க இதைவிடச் சிறந்த மாற்றுவழி இல்லை!

இப்போதுதான் தமிழ் சூழலில் கிண்டில் குறித்து பரவலாக பேசப்படுகிறது. Freetamilebooks தளம் பன்னெடுங்காலமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது மாமல்லன் மாதிரி இலக்கிய சித்தர்கள் கிண்டிலில் நூல்கள் விற்பதை ஓர் இயக்கம் போல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் கிண்டிலில் தங்களுடைய நூல்களை ஒவ்வொரு நாளும் ஏற்றத்தொடங்கி இருக்கிறார்கள். கிழக்குப்பதிப்பகம்தான் முன்னோடியாக உள்ளே புகுந்து தங்களிடம் இருக்கிற ஏராளமான நூல்களை நிரப்பியவர்கள். அதற்குப்பிறகு விகடன் பிரசுரம், காலச்சுவடெல்லாம் அடியெடுத்து வைத்துவிட்டன. உயிர்மை, அடையாளம், விடியல் மாதிரி பதிப்பகங்கள் உள்ளே நுழையலாமா வேண்டாமா என்கிற தயக்கத்திலேயே வாழ்வதாகத் தெரிகிறது. இன்னும் சில மாதங்களில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஈ-சேவையில் இறங்கித்தான் தீருவார்கள் என நம்பலாம். வாசகர்களும் கூட கிண்டிலா தூண்டிலா என்கிற குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.
ஏற்றுக்கொண்டாலும் ஏற்க மறுத்தாலும் வருங்காலத்தை `ஈ'.க்கள்தான் மொய்க்கப்போகின்றன.
சரி கிண்டில் வாங்கலாமா வேண்டாமா?
வாங்கலாம். நிச்சயமா, சத்தியமாக... ங்கொப்புறான ஆணையாக எல்லோருமே வாங்கலாம். நிறைய காசுபணம் இருந்தால் வீட்டில் எல்லோரும் ஆளுக்கு ஒன்று கூட வைத்துக்கொள்ளலாம். அவரவர் வசதி. நிச்சயம் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு கிண்டில் அருமையான கருவி. ஆனால் அதற்குமுன்னால் சில விஷயங்கள் மட்டும் கவனிக்கவும்.

Pros
பத்தாயிரம் போட்டு வாங்கித்தொலைத்துவிட்டோமே என்கிற ஒரே காரணத்திற்காகவாவது படிக்க முயற்சி செய்வோம். வீட்டில் திட்டுவார்களே என்று பாசாங்காவது செய்வோம்.
எங்குவேண்டுமானாலும் ஆயிரக்கணக்கான நூல்களை ஒரே கருவியில் எடுத்துச்செல்லாம்.
இது E-ink தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதனால் டேப்கள் மொபைல்கள் போல ஒளியை பாய்ச்சாமல், காகிதத்தை போல உள்வாங்கிக்கொண்டு வேலை செய்யும். எனவே கண்ணுக்கு நல்லது. அச்சு நூல்கள் படிக்கிற அதே அனுபவத்தைத்தான் கொடுக்கும்.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலவச நூல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கிளாசிக்குகள். ஓசியிலேயே படித்து...
கிண்டில் அன்லிமிடெட் என்று ஒரு வசதி வைத்திருக்கிறான் அமேசான் காரன். வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டிவிட்டால் அல்லது மாதத்திற்கு 200 கட்டிவிட்டால் அதிகம் விற்கிற பிரபலமான நூல்களில் முக்கியமானவற்றை இலவசமாக தரவிறக்கி படிக்கும் வசதி இருக்கிறது. படித்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிட்டால், வேறு நூல்கள் வாங்கலாம். இப்படி பத்து நூல்களை பண்டமாற்றில் படிக்கலாம். 4000.5000 மதிப்புள்ள நூல்களை எல்லாம் இப்படி ஓசியில் வாசிக்கக்கிடைக்கிறது.
கிண்டிலில் தமிழ் நூல்களைவிட ஆங்கில நூல்கள் படிப்பது அலாதியானது. காரணம் எந்த சொல் புரியவில்லை என்றாலும் அதை ஒரு அமுக் அமுக்கினால் உடனே அதனுடைய பூர்வாங்கத்தையே கொட்டுக்கிற ஆப்ஷன். கூடவே Wordwise என்று ஒரு விஷயமும் இருக்கிறது. படிக்கும்போதே கடினமான ஆங்கிலசொல்லுக்கு மேலேயே அந்த சொல்லின் மீனிங்கையும் குட்டியாக போட்டுவிடுவார்கள்! அந்த அமுக் மிச்சம்.
இதில் வை-பை வசதி இருக்கிறது. இணையத்தை மேய முடியும். ஆனால் அது அத்தனை அணுக்கமான அனுபவமாக இருக்காது. ஃபேஸ்புக் பக்கம் குறுதிப்புனல் கிளைமாக்ஸ் கமலஹாசன் முகம்போல இருக்கும். இணையவசதியை வைத்துக்கொண்டு நூல்கள் வாங்கவும் தரவிறக்கவும்தான் மகிழ்ச்சியாக செய்யமுடியும். இது தீமைதானே என்று யோசிக்கத் தோன்றும். ஆனால் இது நன்மைதான். கிண்டில் என்பது நூல்கள் வாசிப்பதற்கான கருவி. அப்புறம் என்ன `இதுக்கு' நமக்கு ஃபேஸ்புக்.
பயணங்களில் வாசிக்க ஏற்றது. ஒரு நூலை வாசிக்க நினைத்தால் உடனே அமேசானில் ஆர்டரைப்போட்டு அப்போதே வாங்கி ஆன்திஸ்பாட்டில் வாசித்து அறிவுஜீவி ஆகிவிடமுடியும்.
நிறைய நாட்களுக்கு சார்ஜ் நிற்கும். கதறக்கதற உபயோகித்தாலும்...
இரவில் கூட விளக்கையெல்லாம் அணைத்துவிட்டப்படிக்கலாம். (பத்தாயிரம் மதிப்புள்ள கிண்டில் பேப்பர் வொய்ட்டில்தான் இந்த வசதி. ஐந்தாயிரத்திற்கு வாங்கினால் விளக்கிருக்காது. இருட்டில் வாசிக்கமுடியாது. )
கிண்டில் நூல்களை இரவல் கொடுக்கமுடியாது. கொடுத்துவிட்டு திரும்பிவருமா என்று கொலைவெறியோடு காத்திருக்கத்தேவையில்லை.
அச்சு நூல்களைவிடவும் கிண்டில்நூல்கள் விலை மலிவு. (அப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் தமிழ் பதிப்பாளர்களுக்கு அந்த ரேஷியோவை உருவாக்குவதில் ஏதோ குழப்பம் இருக்கிறது. அதோடு கிண்டில்காரனே 100 ரூபாய்க்கு மேல் விலை இருந்தால்தான் கூடுதல் டிஸ்கவுண்ட் என்று விலையட்டை வைத்திருக்கிறான் போல...) ஆங்கிலத்தில் அப்படி இல்லை பெரும்பாலும் அச்சுவிலையைவிடவும் ஈ-விலை பாதிதான் இருக்கும்.

Cons
நாம் இயல்பிலேயே சுண்டோக்குகள் (Tsundoku). அதாவது நிறைய படிக்கவேண்டும் என்கிற ஆர்வமிருக்கும். கடைக்கு போவோம். காசுகொடுப்போம். புத்தகங்களாக வாங்கிக்குவிப்போம். ஆனால் படிக்கமாட்டோம். இந்த குணமுள்ளவர்களை சுண்டோக்கு என்று ஜப்பானில் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கிண்டிலை தவறியும் வாங்கிவிடவேண்டாம்.
காரணம் - ஆன்லைனில் புத்தகங்கள் வாங்குவது இன்னும் சுலபம். ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங் சின்ட்ரோம் சபலத்தில் சிக்கி சீரழியும் நமக்கு, புத்தகம் வாங்குவது என்பது அதன் இன்னொரு வெர்ஷன் அடிக்‌ஷனாக மாற வாய்ப்பு இருக்கிறது. வாங்குவது புத்தகமாக இருப்பதால் குற்றவுணர்வும் இருக்காது. நல்ல விஷயத்துக்கு நாலு காசு செலவு பண்றது தப்பில்ல என்கிற மனநிலையிலும், சல்லிசாக கிடைக்கிறதே என்றும் நிறைய செலவழிப்போம். கடைசியில் கிண்டில் முழுக்க ஆயிரக்கணக்கான நூல்களாக இருக்கும். ஆனால் நாலைந்து கூட படித்திருக்கமாட்டோம். புத்தகத்தை வாங்கிவிட்டதாலேயே அதை படித்துவிட்ட திருப்தியை அடைகிறவர்களுக்கு ஜப்பானில் என்ன பெயர் என்று இனிமேல்தான் தேடவேண்டும்.
ஸ்கிரீனுக்கு அடிமையாவது குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு கவுன்சிலிங் கொடுத்து மக்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அச்சு நூல்களை வாசிக்கவே பரிந்துரைக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே ஸ்கீரின்களுக்கு முக்கா அடிமைகளாக இருக்கிற நம்மை இது முழு அடிமையாக்கிவிடும்.
கிண்டிலில் நிறைய படங்கள் இருக்கிற நூல்களை வாசிக்க முடியாது. படங்கள் ப்ளாக் அண்ட் வொயிட்டில்தான் தெரியும். காமிக்ஸ்கள் நிச்சயமாக வாசிக்க முடியாது. மீறி முயற்சித்தால் கோபத்தில் கிண்டிலை உடைத்துவிடுவீர்கள். படங்கள், மேப்புகள், புதிர்கள் உள்ள நூல்கள் வாசிக்க அச்சுதான் பெஸ்ட்.
கிண்டில் நூல்களை கிண்டில் கருவியில்தான் வாசிக்கவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. அதை நம்முடைய மொபைல், கணினி, லேப்டாப், டேப், பக்கத்து சீட் ஆளின் மொபைல் என எதிலும் வாசிக்கலாம். கிண்டில் செயலியை தரவிறக்கினால் போதும். மொபைலில் படிக்கவும் நன்றாகவே இருக்கிறது. எனவே கிண்டில் நூல்களை வாசிக்க கிண்டிலே தேவையில்லை.
ஏற்கனவே உங்கள் வீட்டில் ட்ரெட் மில், ஜிம் ரோப், டேபிள் மேட் எல்லாம் வாங்கி அதை பயன்படுத்தாமல் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால் அதோடு இதையும் லிஸ்டில் சேர்க்க வேண்டி இருக்கும்.
இறுதியாக...
கிண்டில் வாங்குவதற்கு முன்பு வீட்டில் ஒவ்வொரு புத்தகச்சந்தையிலும் வாங்கி வாங்கி குவித்த நூல்களை ஒருமுறை பாருங்கள். எத்தனை படிக்காமல் கிடக்கிறது என்று ஒரு லிஸ்ட் எடுங்கள். கிண்டில் வாங்குகிற யோசனையே வராது. அதையும் மீறி நான் வாசிப்பை நேசித்து சுவாசித்து... என்று விஷால் மோடில் இருந்தால் Please go ahead and get one.
வாங்கிய பிறகு ஒருவிஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். வாங்கிய ஜோரில் அமேசானில் போய் கண்டமேனிக்கு ஆர்டர் போட்டு நூற்றுக்கணக்கில் ஈ-புத்தகங்களை வாங்கி சேமித்துக்கொள்ளாதீர்கள். வாழ்நாளில் அதையெல்லாம் படிக்கவே மாட்டீர்கள்.
90சதவீத கழிவு என ஆசை வார்த்தை காட்டுவான் அமேசான் சாத்தான். அதற்கெல்லாம் மயங்காமல், அமேசானை உங்கள் நூலகம் போல நினைத்துக்கொள்ளுங்கள். எப்போது தேவையோ அப்போது காசு கொடுத்து வாங்கி தரவிறக்கி வாசித்துக்கொள்ளுங்கள். அமேசான்காரன் பல ஆயிரம் கோடி முதலீடு போட்டு கடை வைத்திருக்கிறான் இப்போதைக்கு மூடமாட்டான்.

Written by Ilango Ramasamy (Facebook)
நான் ஏன் கிண்டிலை - " kindle" ஐ விரும்புகிறேன்?
1. எந்தப் புத்தகத்தையும் விட எடை குறைவு.
2 Smart Phon ஐ, வாட்ச்சை, லேப்டாப் ஐ விட பல மடங்கு அதிக நேரம் சார்ஜ் நிற்கிறது.
3, கண்களை உறுத்துவதில்லை.
4. தெரியாத, புரியாத ஆங்கில வார்த்தைகளைத் தொட்டல் போதும் சகல அர்த்தங்களும் கொண்ட அகாரதிப் பொருள் விளக்கம் உதாரணங்களுடன் என் விரல் நுனியில்.
5. அடிக்கோடிட்டு, தலைப்புக்களோடு குறிப்புகளையும் பதிந்து வைத்துக் கொள்ளும் வசதி ..அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் அனுகூலம்.
6. இப்படி அடிக்கோடிடப்பட்டு, புத்தகத்தின் பின் முன் அட்டைகளில் குறிப்புகள் எழுதப்பட்ட எத்தனையோ புத்தகங்கள் இரவலாக போய் திரும்ப வரவே இல்லை. புதிதாக வேறு புத்தகம் வாங்குவது பெரிதில்லை. ஆனால் மீண்டும் ஒரு முறை வாசித்து அதே போல் குறிப்புகள் பதிந்து வைக்கும் நேரத்தில் ஒரு புதிய புத்தகத்தை வாசித்து விட மனம் பரபரக்கும். அதனால் இழந்த குறிப்புகள் இதுவரை இழந்தவையாகவே இருக்கின்றன. ஆனால் கிண்டிலில் நான் பதிந்து வைக்கும் குறிப்புகள் என் காலத்திற்கும் ஏன் அதற்குப் பிறகும் நிலைத்து நிற்கும்,
7, புத்தங்கங்கள் இடத்தை அடைக்கும், தாள்கள் கிழிந்து போகும், பைண்டிங் விட்டுக் கொண்டு வரும்...கிண்டிலில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
8. திருட்டு, வெள்ளம், தீ என எந்தப் பிரச்சினையிலும் எனது கிண்டில் நூல்கள் அழிந்து போகப் போவதில்லை.
9. நான், எனது இணையர், எனது மகள் என்று மூன்று பேரும் ஒரே நேரத்தில் ஒரே புத்தகத்தை சண்டை போடாமல் வாசிக்க முடிகிறது.
10. புத்தகங்கள் எனக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பதும் மிக முக்கியக் காரணம். எண்ணற்ற இலவசப் புத்தகங்களும் கிடைக்கின்றன என்பது கூடுதல் பயன்.
11. புத்தகங்களைத் தேடி அலையத் தேவையில்லை. நினைத்த கணத்தில் விரல் நுனியில் உங்களுடைய விருப்பமான புத்தகம் உங்களை வந்து சேரும். 2003ல் இருந்து நான் தேடி அலைந்த Gulag Archipelago என்னும் புத்தகம் 2006 ஆம் ஆண்டு ரஷ்யாவில் படித்த ஒரு தோழரிடம் இருந்து அதிர்ஷ்ட்ட வசமாகக் கிடைத்தது. இன்று இத்தனை வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை
12. Kindle Unlimited subscribe செய்தால் என்னால் உலகின் மிகப் பெரும் நூலகத்தை என் உள்ளங் கைக்குள் வைத்து செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியும்.
13. Kindle device - 8000 குடுத்து வாங்கணுமா ? என்று யோசிப்பவர்கள் kindle App மூலம் Smart phone , tablet, அல்லது kindle Cloud reader மூலம் computer, Laptop என எதில் வேண்டு மானாலும் வாசிக்க முடியும். கண்கள் எளிதில் அயர்ச்சியுறும் என்பது தான் இதில் உள்ள சிக்கல்.
14. கண்களைப் பாதுகாக்க வேண்டும், அதே சமயம் காலத்திற்கும் தேவையான புத்தகங்களை மலிவு விலையில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளதிலேயே மிகவும் விலை குறைவான kindle Reader ஐ வாங்குவது நலம்.
15. நாப்பது வயசுக்கு மேல சாளேஸ்வரம் வந்து Reading glass அ எங்க வெச்சோம் குறத மறந்து படிக்க முடியாம அவஸ்தப் படுறத Kindle ல்ல இருக்கும் Font Size increase option மூலமா எளிதில் கடந்து போகலாம்.
விலை அதிகமாக கொடுத்து வாங்கினால் அதில் Extra Add on Features கிடைக்கும் என்பது kindle ஐப் பொறுத்த வரை illogical என்பது என் தாழ்மையான கருத்து.... அதனால Basic model என்ன வெலைல கெடச்சாலும் கண்ண மூடிக்கிட்டு வாங்கிட வேண்டியது தான்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு தொழில் நுட்பம் திறந்து விட்டுள்ள ஒரு பெரும் கதவு கிண்டில்.

Chinthan Ep 
https://www.facebook.com/chinthanep 


வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது எப்படி?
புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் எப்படித் துவங்குவது என்று தெரியவில்லையா?
இதை முயற்சி செய்துபாருங்களேன்..
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், “புத்தகங்கள் வாசிப்பது எப்படி?” என்கிற கேள்வியை விதவிதமாக நிறையபேர் கேட்பது வழக்கம். அவர்களுக்கு எப்போதும் சொல்வது ஒன்றுதான். புத்தகம் வாசிப்பதும் ஜிம்முக்குப் போவதும் ஒன்றுதான். பத்து கிலோ குறைச்சே ஆகனும்னு ஜனவரி ஒன்றாம் தேதி முடிவெடுத்து, பத்தாம்தேதி வரையிலும் ஜிம்முக்குப் போய்விட்டு, “என்னடா இன்னுமே வெயிட்டு குறையல” என்று உடற்பயிற்சியை முழுவதுமாக நிறுத்திவிடுபவர்களை ஏராளமாகப் பார்க்கமுடியும். அதேபோன்ற உத்தியை புத்தக வாசிப்பிலும் பயன்படுத்தக்கூடாது.
பத்தாயிரம் பக்கங்களையோ நூறு நூல்களையோ படிப்பதை இலக்காகவெல்லாம் வைக்கவே கூடாது. இன்னும் சொல்லப்போனால் எவ்வளவு படிக்கப் போகிறோம் என்கிற எந்த இலக்கும் இல்லாமல்தான் துவங்கவேண்டும். தினமும் ஒரேயொரு பக்கத்தைப் படிப்பது என்கிற குறிக்கோளை மட்டும் வைத்துக்கொண்டாலே போதும். அந்த குறிக்கோளில் இருந்து எந்த சூழலிலும் தவறிவிடவே கூடாது. ஆண்டின் துவக்கத்தில் ஒரு நூலைத் தேர்வு செய்துவிடுங்கள். தினமும் அந்த நூலில் இருந்து ஒரேயொரு பக்கத்தைப் படித்தே தீருவது என்று முடிவெடுங்கள். அதாவது தினமும் பல்தேய்த்தே ஆவதென்று முடிவெடுத்து நாம் செயல்படுத்திவருவதைப்போல. ஆனால் அதேவேளையில், ஒரு பக்கத்தைப் படித்துமுடித்ததும், நூலை எடுத்துவைத்தே ஆகவேண்டும் என்று இருக்காமல், நேரமும் விருப்பமும் இருந்தால் இரண்டாவது பக்கத்தையும் படியுங்கள். மேலும் ஆசையாக இருந்தால் மூன்றாவது, நான்காவது என்று அடுத்தடுத்த பக்கங்களைப் படியுங்கள்.
ஒருநாளைக்கு ஒரு பக்கத்திற்கு மேல் படிக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கத்தையாவது படிக்காமல் இருக்கவே கூடாது. அப்படி மட்டும் நீங்கள் செய்துவிட்டால், ஒரு ஆண்டின் முடிவில் 365 பக்கங்களைப் படித்து முடித்திருப்பீர்கள்.
ஆனால் 365 நாட்களும் தினமும் நூலைக் கையில் எடுத்து படித்தீர்களென்றால், நிச்சயமாக உங்களால் ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தோடு நிறுத்தவே முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைப் படித்தே தீருவீர்கள் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.
சரி, நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைப் படிப்பதற்கான ஆவலைக் கொண்டு வருவதற்கான வழிகள் ஏதும் இருக்கின்றனவா? நிச்சயமாக இருக்கின்றன.
1. துவங்கும்போது முதல் நூலாக நாவலை எடுத்துப் படித்தால், பெரிய அழுத்தமின்றி படிக்கலாம். அடுத்தடுத்த என்னாகும் என்று ஆர்வமாகவும் படிப்பீர்கள். அதனால் ஒருநாளைக்கு ஒரு பக்கத்தோடு உங்களால் நிறுத்தவே முடியாது
2. சிறுகதைத் தொகுப்பைப் படித்தால், ஒவ்வொரு கதையைப் படித்துமுடித்ததுமே ஏதோவொன்றை முடித்து சாதித்ததைப் போன்ற உணர்வு வரும்
3. உங்களுக்குப் பிடித்த தலைப்பிலான நூல்களை எடுத்துப் படித்தால், நிச்சயமாக ஆர்வமாக நிறைய பக்கங்களைப் படிப்பீர்கள்
4. அச்சு நூலை மட்டுமல்லாமல் கிண்டில் ஏப்பிலும் ஏதாவது நூலைத் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதனைப் படிப்பதும் எளிதாக இருக்கும். அச்சு நூல்கள் கையில் இல்லாத நாட்களில் கிண்டிலில் படிக்கலாம். “நான் நண்பர்களுடன் கோவா டூர் போயிட்டேன் அதான் சில நாட்கள் படிக்கமுடியவில்லை” என்று காரணம் சொல்வதைத் தடுக்கமுடியும்.
5. நீங்கள் எத்தனை வயதாக இருந்தாலும், சிறார் நூல்களை எடுத்துப் படிக்கலாம். அவற்றை வேகமாகவும் படிக்கமுடியும். எளிதாகவும் இருக்கும். நிறைய பக்கங்களை வாசித்த உணர்வும் ஏற்படும்
6. வாசிப்புப் பழக்கத்தைப் பொறுத்தவரை சில நண்பர்களையும் உடன் சேர்த்துக்கொள்வது நல்லது. தினமும் வாசித்த பக்கங்களை குறித்துவைத்துக்கொள்வதற்கோ அல்லது வாசித்ததைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது பேசிக்கொள்வதற்கோ உங்களுக்குள் ஒரு வாட்சப் குழுவைக்கூட உருவாக்குவது பெரிதும் உதவும். ஆனால் அதைத்தவிர வேறெதையும் அந்தக்குழுவில் பகிரவோ பேசவோ செய்யாதீர்கள்
ஆனால் இதையெல்லாம் செய்தும் ஆண்டுக்கு 365 பக்கங்களை மட்டும்தான் படிக்கமுடிந்ததா? பிரச்சனையே இல்லை. 365 பக்கங்களெல்லாம் பெரிய எண்ணிக்கையா என்கிறீர்களா? நிச்சயமாக பெரியதுதான். சுமார் 120 பக்கங்களைக் கொண்ட மூன்று நூல்களை நீங்கள் இந்த ஆண்டில் படித்துமுடித்திருப்பீர்கள். ஒருநூலைக் கூட படிக்காத கடந்த ஆண்டைவிடவும் அது பலமடங்கு அதிகம்தானே.